Homeசெய்திகள்இந்தியாமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரளா நீர்வளத்துறை அமைச்சர்!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – கேரளா நீர்வளத்துறை அமைச்சர்!

-

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து ஆய்வுக் கூட்டம், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

முல்லைப்பெரியாறு

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், இது தொடர்பாக யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கூறினார். மேலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் ரோசி அகஸ்டின் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்களில் வீண் வதந்திகள் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

தொடர்ந்து பேசிய அவர், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து தினமும் ஆய்வு செய்யவும், அணையை திறந்துவிடும் சூழ்நிலை எழுந்தால் நதிக்கரையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினார்.

MUST READ