Homeசெய்திகள்இந்தியாதாறுமாறாக ஓடிய பேருந்து மோதி விபத்து... 7 பேர் பலி, 49 பேர் காயம்... விபத்துக்கு...

தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி விபத்து… 7 பேர் பலி, 49 பேர் காயம்… விபத்துக்கு யார் பொறுப்பு?

-

மும்பையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைவருக்கு ஏற்கெனவே பஸ்சை ஓட்டிய அனுபவம் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அவர் கார்-வேனை ஓட்டிய அனுபவம் மட்டுமே இருந்துள்ளது. டிரைவர் பெஸ்ட் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிசம்பர் 1 முதல் பணியில் இணந்துள்ளார்.

இந்த விபத்து திங்கள்கிழமை இரவு 9:50 மணியளவில் அஞ்சும்-இ-இஸ்லாம் மசூதிக்கு அருகிலுள்ள எஸ்.ஜி பார்வே சாலையில் நடந்தது. பயணிகள் நிரம்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வேகமாக வந்த பேருந்து பலரை நசுக்கியது. இறுதியில் ஒரு கட்டிடத்தின் மீது மோதி பேருந்து நின்றது. கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, ​​100 மீட்டர் சுற்றளவில் 40 வாகனங்கள் மீது பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘‘போலீசார் பஸ் டிரைவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பஸ் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. பேருந்தில் ஆர்டிஓ ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. டிரைவர் போதையில் பஸ்சை ஓட்டியதாக விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்கள் கூறுகின்றனர். இதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அதிவேகத்தால் இந்த விபத்து நடந்ததாக சிலர் தெரிவித்தனர்.

டிரைவரின் அனுபவம் குறைவாக இருந்ததாலா அல்லது விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. டிரைவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

MUST READ