முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், முஸ்லிம் ஆண்களுக்கு ”ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு” என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.
மேலும் முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட திருமணப் பதிவுச் சட்டம், 1998 இன் கீழ் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று அக்டோபர் 15, 2024 அன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அக்டோபர் 21, 2024, அன்று வழங்கப்பட்டுள்ளது.