2023- 2024 ஆம் நிதியாண்டின் கடைசி மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட்களில் ஈக்விட்டி திட்டங்களில் சுமார் ரூபாய் 22,633 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் வந்துள்ளன. இதில் முந்தைய பிப்ரவரி மாதத்தில் செய்யப்பட்ட முதலீடுகளை விட 16% குறைவு என்று மியூச்சுவல் ஃபண்ட் அசோசியேசனான AMFI தெரிவித்துள்ளது.
இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!
சிறு முதலீட்டாளர்கள் எஸ்ஐபிக்களில் முதலீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் எஸ்ஐபி மூலம் 19,270 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டு முழுவதும் கணக்கிட்டால் எஸ்ஐபி மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 28% அதிகம் என்று AMFI தெரிவித்துள்ளது.
இளைஞர்களைக் கவர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம்!
இனி வரும் நாட்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.