டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (அக்.17) மாலை 04.00 மணிக்கு 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2021- ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘புஷ்பா’ திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு வழங்கினார். அதேபோல், 2021- ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஆலியா பட், கிருதி சனோன் ஆகியோர் பெற்றனர்.
தி ராக்கெட்ரி எஃபக்ட் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் மாதவன் பெற்றுக் கொண்டார். கருவறை என்ற குறும்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதைப் பெற்றார். ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக பிரேம் ரக்ஷித் சிறந்த நடன பயிற்சிக்கான தேசிய விருதைப் பெற்றார்.
டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
2021- ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி திரைப்படம் பெற்றது. கடைசி விவசாயி பட இயக்குநர் எம்.மணிகண்டன், படத்தைத் தயாரித்த டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம், விருது பெற்றது. இயக்குநர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.