Homeசெய்திகள்இந்தியாதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

-

 

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
Photo: PIB

டெல்லியில் உள்ள நேஷ்னல் மீடியா சென்டரில் (National Media Centre) இன்று (ஆகஸ்ட் 24) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவினர், 2021-ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளனர்.

“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

அதன்படி, கன்னட மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது 777 சார்லி திரைப்படம். கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கல்வி திரைப்படமாக சிற்பங்களின் சிற்பங்கள் ஆவணப்படத்திற்கும், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழியில் சிறப்புத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது ஹோம் படம். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் சண்டை வடிவமைப்பாளர் கிங் சாலமன், நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித், தொழில்நுட்ப கலைஞர் சினிவாஸ் மோகன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடல்கள் பிரிவில் புஷ்பா படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும், பின்னணி இசைக்கான தேசிய விருது ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:

சிறந்த திரைப்படத்திற்கான விருது மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா திரைப்படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட்- க்கும் மற்றும் கீர்த்தி சனோனுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ