Homeசெய்திகள்இந்தியாதேசியவாத காங்கிரஸைக் கைப்பற்ற பவார்கள் இடையே மோதல்!

தேசியவாத காங்கிரஸைக் கைப்பற்ற பவார்கள் இடையே மோதல்!

-

 

தேசியவாத காங்கிரஸைக் கைப்பற்ற பவார்கள் இடையே மோதல்!
Photo: NCP Sharad Pawar

உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், சரத்பவார் கூட்டிய கூட்டத்தில், 12 முதல் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அஜித்பவாருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார், தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சரான நிலையில், இருதரப்பும் தங்கள் பலத்தை நிரூபிக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதில், மொத்தம் உள்ள 53 சட்டப்பேரவை உறுப்பினர்களில் சரத்பவாரின் அழைப்பையேற்று, 12 முதல் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரை பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், அஜித்பவாரின் அழைப்பையேற்று 29 முதல் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்தது 36 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி பறிக்கப்படுவதில் இருந்து தப்ப முடியும் என்ற நிலையில், அஜித்பவாரும், அவரது ஆதரவாளர்களும் உள்ளனர். இதற்கிடையே, தங்களுக்கு 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகப் பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் தரப்பு தாக்கல் செய்துள்ளது.

அதேநேரம், இந்த விவகாரத்தில் தங்களைக் கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் தரப்பு முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

இரு தரப்பும் தங்களுக்கு அதிக ஆதரவு உள்ளதாக கூறும் நிலையில், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற இருதரப்பும் முழு வீச்சில் உள்ள நிலையில், மகாராஷ்டிரா அரசியல் களம் அடுத்து வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் உள்ள சரத்பவாரின் இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 06) பிற்பகல் நடைபெறவுள்ளது.

MUST READ