Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு!

-

 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘மக்களவைத் தேர்தல் 2024’- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 09- ஆம் தேதி முதல் மார்ச் 09- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு மார்ச் 16- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டும் ஏராளமானோர் விண்ணப்பிக்கத் தவறினர். இதனால் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக தேசிய தேர்வு முகமை சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, இன்றும் (ஏப்ரல் 09), நாளையும் (ஏப்ரல் 10) மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்ரல் 10) இரவு 10.59 மணி வரை ஆன்லைன் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், இரவு 11.59 மணிக்குள் அதற்கான தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://nta.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ