Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

-

 

 

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
File Photo

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு வரும் மே 7- ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெறவுள்ளது. சுமார் 18,72,341 பேர் நீட் தேர்வை எழுத உள்ள நிலையில், அதற்காக இந்தியா முழுவதும் சுமார் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வெளிநாடுகளில் 14 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் உருது, அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. தேர்வர்கள் Neet.nta.nic.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ