டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைத்தார்.
75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடக்கலையில் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 960 கோடி ரூபாய் மதிப்பில் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் அறுகோண வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 1,272 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரலாம்.
மூன்று நுழைவு வாயில்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றம். அந்த நுழைவு வாயில்களுக்கு ஞானம், சக்தி, கர்மா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வி.ஐ.பி.க்கள்., எம்.பி.க்கள் பார்வையாளர்கள் வர தனித்தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“சோழர் காலத்தில் நீதி, நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம், கட்டியுள்ள இந்த நாடாளுமன்றம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் 150 ஆண்டு காலம் உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா, இன்று (மே 28) காலை 07.30 மணிக்கு சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக ஆதீனங்கள் சூழ மக்களவையில் செங்கோலை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் திறப்பையொட்டி, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற அனைத்து மத பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இன்று (மே 28) நண்பகல் 01.00 மணியளவில் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா, தேசிய கீதத்துடன் தொடங்கியது. விழாவில், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 25 அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!
பின்னர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, சாவர்ககரின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.