Homeசெய்திகள்இந்தியாபுதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

-

 

புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
File Photo

தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பையும் கடந்து கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து முடிவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வரும் ஜூலை மாதத்தில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற வளாகம் திறந்து வைக்கப்படுகிறது. தற்போது உள்ள நாடாளுமன்ற மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 250 உறுப்பினர்களும் அமர வசதி உள்ளது.

பா.ஜ.க. எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா காலமானார்!

வருங்காலத் தேவைகளை மனதில் கொண்டு, புதிய நாடாளுமன்ற வளாகத்தில் 888 உறுப்பினர்கள் மக்களவையில் அமரவும், 300 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவைக் கூட்டு அமர்வுகள் நடக்கும் போது, 1,280 உறுப்பினர்கள் மக்களவையில் அமரும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு நவீன வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் கட்டமைக்கப்படவுள்ளன.

MUST READ