ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்த தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உண்டவள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமலா ராவ், அர்ச்சகர் கிரண் மற்றும் வேத பண்டிதர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தீர்த்த பிரசாதங்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி சாமி புகைப்படங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன் பிறகு தேவஸ்தானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தற்போது வரை கடந்த ஆறு மாதத்தில் செய்துள்ள மாற்றங்கள், இனிவரும் காலங்களில் பக்தர்களுக்காக செய்யக்கூடிய திட்டங்கள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு இ.ஓ. ஷியாமலா ராவ் விளக்கம் அளித்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘7/G ரெயின்போ காலனி 2’ ….. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!