Homeசெய்திகள்இந்தியாவட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி

-

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Image

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் எனக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றவில்லை என்றார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வங்கிக்கடன் வாங்கியோர் செலுத்தும் வட்டி மேலும் உயராது என்பதால் வாடிக்கையாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

MUST READ