Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை - உயர் கல்வி அமைச்சகம்

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை – உயர் கல்வி அமைச்சகம்

-

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என உயர் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் டெல்லியில் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை - உயர் கல்வி அமைச்சகம்

தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் நீட் குளறுபடி தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளது. நீட் தேர்வின் போது ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை எனவும் முறைகேடுகள் தொடர்பாக கமிட்டி அமைத்து ஆராய்ந்தோம் என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை - உயர் கல்வி அமைச்சகம்

ஆறு தேர்வு மையங்களில் (1600 மாணவர்கள் 6- மையங்களில்) முறை கேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் தொடர்ந்து கூடுதல் விசாரணை நடந்து வருவதாக எஸ்.கே. சிங் தகவல் அளித்துள்ளார்.

நீட் தேர்வு புகார்கள் குறித்து கேட்டறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

நீட் என்னும் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது – உதயநிதி ஸ்டாலின்! (apcnewstamil.com)

UPSC முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்ததாக கூறப்படும் 6 – தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 1600 மாணவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற தேர்வாகவே உள்ளது – செல்வப்பெருந்தகை! (apcnewstamil.com)

முறைகேடு நடந்ததாக கூறப்படும் 6-மையங்களில் உள்ள 1600 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் அல்லது Grace மார்க் வழக்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

MUST READ