Homeசெய்திகள்இந்தியாஏர் இந்தியா நிர்வாகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை - ப.சிதம்பரம் அதிருப்தி!

ஏர் இந்தியா நிர்வாகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ப.சிதம்பரம் அதிருப்தி!

-

ஏர் இந்தியா நிர்வாகம் அரசிடம் இருந்து தனியாரிடம் கை மாறியதில் இருந்து நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட விருந்தார். அப்போது, விமானத்திற்கு வெளியே 15 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட நிலையில், இரவு 8.45க்கு புறப்பட வேண்டிய அந்த விமானம், 9.25 மணிக்கே சென்னை புறப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக ப.சிதம்பரம் தமது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், AI 540 டெல்லியில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் அனைத்து பயணிகளும் கடந்த 15 நிமிடங்களாக ஏரோ பிரிட்ஜில் நிற்பதாகவும், தங்களுக்கு வாயிலில் ஏறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டபோதும், விமானத்தின் வாசலில் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நடுவானில் விமானத்தில் பயணியை தேள் கொட்டியது!
Photo: Air India

புறப்படும் நேரம் முடிந்து 10 நிமிடங்களுக்குப் பின்னரே பயணிகள் விமானத்தில் ஏறுவதாகவும், இந்த விமானம் எப்போது புறப்படும் என்று யாருக்கும் தெரியாது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏர் இந்தியா விமானத்தில் தாம் அடிக்கடி பயணிப்பவன் என்று தெரிவித்துள்ள ப.சிதம்பரம், ஏர் இந்தியா நிர்வாகம் அரசிடம் இருந்து தனியாரிடம் கை மாறியதில் இருந்து நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

P_chidambaram

மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் அவசரப்பணிகளை திறம்பட நிர்வாகிக்க பல்வேறு நிலைகளில் திறமையான ஊழியர்கள் இல்லை என்று தாம் எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ