Homeசெய்திகள்இந்தியாவடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

-

 

வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால், வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து முதல் காணொலி வெளியீடு

கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றால், சம்மந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டதால், தெலங்கானா, ஜம்மு- காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்க மக்கள் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கேப்டன் மில்லர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ரிலீஸ்

மேலும், பெட்ரோல், டீசல் இருப்பில் உள்ள சில பங்க்குகளில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் எரிபொருளை நிரப்ப நீண்ட தூரம் காத்திருக்கின்றனர். எனினும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி தொழிலாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

MUST READ