Homeசெய்திகள்இந்தியாபிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல... அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி... 69 பேருக்கு திவால் நோட்டீஸ்...

பிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல… அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி… 69 பேருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபர்!

-

தெலங்கானாவில் பிச்சைக்காரர் உள்பட 69 பேரிடம் 1.95 கோடி கடன் பெற்று, பணத்தை கடனை திருப்பி தர முடியாது என வக்கில் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் போனக்கல் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் அசோக் என்பவர் தனது மனைவியுடன் பிச்சை எடுத்து வருகிறார். பல ஆண்டுகளாக பிச்சை எடுத்துவரும் அசோக், தனது மகளின் படிப்பிற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் ஓட்டல் அதிபர் நரசிம்மராவ் என்பரது ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது அசோக்குக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் நரசிம்மராவ் உன்னிடம் பணம் இருந்தால் தன்னிடம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி உள்ளார். இதனால் அசோக் வட்டிக்கு ஆசைப்பட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த ₹50,000 கடனாக வழங்கினார். இதற்கான வட்டியை சில மாதம் கொடுத்த நரசிம்மராவ் பின்னர் வட்டி கட்டவில்லை. இதனால் அசோக் தனது பணத்தை திருப்பி கேட்டபோது, நரசிம்மராவ் திருப்பித் தர மறுத்துவிட்டார்.

இதனிடையே, நரசிம்மராவ் பல இடங்களில் கடன் வாங்கியதால் ₹ 1.95 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பிச்சைக்காரர் அசோக் உள்ளிட்ட 69 பேருக்கு வழக்கறிஞர் மூலம் பணத்தை திருப்பி தர முடியாது என்றும், தன்னிடம் எதுவும் இல்லை என்றும் கூறி ஐபி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்காக கம்மம் சிவில் நீதிமன்றத்தில் திவால் வழக்கும் தாக்கல் செய்தார். அதில் ₹ 1 கோடியே 95 லட்சம் கடன் வாங்கிய நிலையில் அதனை கட்டும் நிலையில் இல்லை என 69 பேருக்கு ஐபி நோட்டீஸ் கொடுத்துள்ளார். நோட்டீஸ் பெற்றவர்களில் பிச்சைக்காரன் அசோக் பலரும் கண்ணீருடன் உள்ளனர்.

ஓட்டல் வியாபாரி நரசிம்மராவ்வை நம்பி பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்கினால் இப்படி ஏமாற்றி விட்டதாக பிச்சைக்காரர் அசோக் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தமது மகள் படிக்க சேமித்த பணத்தை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஓட்டல் அதிபர் நரசிம்மராவ் பிச்சைக்காரைக்கூட விட்டு வைக்காமல் கடன் பெற்று ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ