Homeசெய்திகள்இந்தியாஇந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு ஒன்றரை லட்சம் வாக்குகள்... தலைகீழ் மாற்றத்தை விரும்பும் மக்கள்...

இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு ஒன்றரை லட்சம் வாக்குகள்… தலைகீழ் மாற்றத்தை விரும்பும் மக்கள்…

-

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் உள்ளார்.

அதே சமயம், பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் விதிஷா தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இவர் முன்னிலையில் உள்ளார். விதிஷா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பிரதாப் பானு சர்மாவை விட சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சௌகான் முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதா அறிவித்த அக்சய் காந்தி இறுதி நேரத்தில் பாஜக கட்சியில் சேர்ந்துவிட்டார். அதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லாத சூழல் உருவானது. பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி பிற கட்சிகளுடன் மோதினார். மேலும், இந்தூர் தொகுதி மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியது. அதன்படி, இந்தூரில் பெரும்பாலான வாக்குகள் நோட்டாவுக்கு சென்றது தற்போது தெரியவந்துள்ளது. பாஜக வேட்பாளர் 8 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் நேரத்தில், நோட்டாவுக்கு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை இவ்வளவு வாக்குகள் கிடைத்ததில் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

MUST READ