Homeசெய்திகள்இந்தியாமருந்து நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு... ஆட்சியரை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்

மருந்து நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு… ஆட்சியரை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்

-

தெலுங்கானா மாநிலத்தில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர், அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் துடியாலா தாலுகாவில் உள்ள லாக்செர்லா கிராமத்தில் மருந்து நிறுவனங்கள் அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கிராம மக்களுடன், இன்று கருத்துக்கேட்பு கூட்டம் லாக்செர்லா கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தனியார் நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், அவர்களது வாகனங்கள் மீது கற்கள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள் தங்களது வாகனங்களில் ஏறி தப்பிச்சென்றனர். அவர்களை கிராம மக்கள் விரட்டிச்சென்று தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சேதம் அடைந்தன.

MUST READ