Homeசெய்திகள்இந்தியாஅக்.09- ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

அக்.09- ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

-

- Advertisement -

mallikarjun kharge press meet

முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி, வரும் அக்டோபர் 09- ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி. பதவி பறிபோனது!

2024 மக்களவைத் தேர்தலுக்கு தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை ஆயத்தமாகி வரும் சூழலில், தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, வரும் அக்டோபர் 09- ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், 84 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2024 மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் இட பகிர்வு மற்றும் அண்மை நாட்களாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 09- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

MUST READ