Homeசெய்திகள்இந்தியாகோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!

-

 

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!
Photo: ANI

பெங்களூரு- ஹவுரா விரைவு ரயில், ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாளில் கூடிய குடும்பம்… இளையராஜா உடன் கங்கை அமரன் குடும்பத்தினர்!

பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களும் தமிழக ரயில் நிலையங்கள் வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் விபத்தில், இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்; 900- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரத், சரோ ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளில் உள்ளூர் பகுதி வாசிகளும், பொதுமக்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

உதயநிதி அப்படி சொன்னதுல எனக்கு விருப்பமில்லை… நெகிழ்ச்சியா‌ பேசிய விஜய் ஆண்டனி!

ரயில் விபத்து சம்பவத்திற்கு இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும்; ஒடிஷாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ