Homeசெய்திகள்இந்தியாமூதாட்டியை மடியில் அமர வைத்து வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!

மூதாட்டியை மடியில் அமர வைத்து வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!

-

 

மூதாட்டியை மடியில் அமர வைத்து வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!
File Photo

தெலுங்கானா மாநிலத்தில் வாக்குச்சேகரிப்பின் போது, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் செய்த செயல் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்த மாதம் 30- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க, சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். மற்றும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.

வாக்குச் சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மல்லா ரெட்டி, மக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தரையில் அமர்ந்திருந்த அவர், தனக்கு பின்னாளில் இருந்த மூதாட்டியை அழைத்து, தனது மடியில் அமர வைத்துக் கொண்டார்.

“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

இது தொடர்பாக வீடியோ, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ