Homeசெய்திகள்இந்தியாஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஸ்ரீஜேஷ் - மனு பாக்கர்

ஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஸ்ரீஜேஷ் – மனு பாக்கர்

-

பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி
அறிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா, ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி, ஆடவர் ஹாக்கி போட்டியில் ஒரு வெண்கலம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

மனு பாக்கர் - Manu Bhaker

ஒலிம்பிக் நிறைவு விழாவில் மகளிர் சார்பில் இரட்டை வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில், ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனு பாக்கருடன், இணைந்து இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. ஒலிம்பிக் தொடருடன் ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஶ்ரீஜேஷ் இளையோர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ