ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமே இல்லை. குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக் காலத்துக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ப. சிதம்பரம் கூறியதாவது : இதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ கொண்டு வருவதற்கு தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
கடந்த மாதம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற வலுவான கருத்தை முன்வைத்தார். அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையை உருவாக்குகின்றன என்று வாதிட்டார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதற்கு அரசியலமைப்பு ரீதியான தடைகள் அதிகம் . அது சாத்தியமில்லை. இண்டியா கூட்டணி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முற்றிலும் எதிர்க்கிறது. என இவ்வாறு அவர் கூறினார்.