‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தேர்தல் கொள்கையை அ.தி.மு.க. ஆதரிப்பதாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை அ.தி.மு.க. உறுதியாக ஆதரிக்கிறது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென அ.தி.மு.க. வலியுறுத்துகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சகத் திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும். எந்த அரசும் கொள்கைகளைத் திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும். நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையைத் தவிர்க்கும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொள்கை தேர்தல் நேரம், பெரும் செலவை மிச்சப்படுத்தும்.
இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.