Homeசெய்திகள்இந்தியா'ஒரே நாடு ஒரே தேர்தல்'- என்னென்ன பரிந்துரைகள்?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?

-

 

'ஒரே நாடு ஒரே தேர்தல்'- என்னென்ன பரிந்துரைகள்?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த நிகழ்வின் போது, மத்திய உள்துறை அமித்ஷா, காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!

10,000- க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இடம் பெற்றிருக்கிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் ஆகும். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த உயர்மட்டக் குழு பரிந்துரை செய்திருந்தது.

ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது சாத்தியமே. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டத்தில் திருத்தங்களை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!

தொங்கு சட்டப்பேரவை, ஆட்சிக் கவிழ்ந்தால், எஞ்சிய பதவி காலத்திற்கு இடைத்தேர்தலை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

MUST READ