வங்கதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கும் ‘ஜோஷுவா’….. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!
உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விதிக்கப்பட்ட தடை வரும் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆண்டு என்பதால் தடை உத்தரவானது மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், சில நாடுகளுக்கு மட்டும் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளது மத்திய அரசு. இதன்படி, வங்கதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸ் நாட்டிற்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன், பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளராக உருவெடுத்த இளம் நடிகை……உதவிக் கரம் நீட்டிய எஸ்.ஜே. சூர்யா!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.