Homeசெய்திகள்இந்தியா"பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்"- சரத்பவார் அறிவிப்பு!

“பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்”- சரத்பவார் அறிவிப்பு!

-

- Advertisement -

 

Photo: ANI

எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு… பொதுமக்கள் கவலை!

கடந்த ஜூன் 23- ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சூர்யா சேவியரின் இல்லத்திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கூட்டத்தில், வரும் 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு, பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், “எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம், சிம்லாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும்” என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ