Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!

குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!

-

 

குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!
Photo: President Of India

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பிரச்சனைக்கு சமூகத் தீர்வுக் காணப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம மாஸான லுக்கில் அலப்பறைய கிளப்பும் தலைவரு…. ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியானது!

கடந்த ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் மணிப்பூருக்கு சென்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 31 தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது, குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வழங்கினர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓப்ரைன், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவினர், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி., “மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கைத் தேவை எனக் கூறினோம். மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம்” என்று கூறினார்.

என்னது…. நடிகர் கவினுக்கு திருமணமா?……சமூக வலைதளங்களில் பரவும் மணப்பெண்ணின் புகைப்படம்!

அதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்.பி., “குடியரசுத் தலைவர் உறுதியான எந்த பதிலும் அளிக்கவில்லை; தங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ