Homeசெய்திகள்இந்தியாசெல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்...  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்... பாலக்காடு...

செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்…  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்… பாலக்காடு அரசுப்பள்ளியில் பரபரப்பு! 

-

- Advertisement -
kadalkanni

கேரளாவில் செல்போனை பறிமுதல் செய்த தலைமை ஆசிரியருக்கு, 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் வகுப்புக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு தொடர்ந்து செல்போன் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தபோதும், அவர் தொடர்ந்து செல்போனை பயன்டுத்தி உள்ளார்.

சம்பவத்தன்று அந்த மாணவர் வழக்கம்போல் வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தி உள்ளார். அதனைப் பார்த்த ஆசிரியர், மாணவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து  பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக சென்று தனது செல்போனை திருப்பி தந்து விடுமாறு கேட்டுள்ளார். அவரது செயல்பாட்டை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தனர்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அந்த மாணவர், தனது செல்போனை திரும்ப தரா விட்டால் பள்ளியைவிட்டு வெளியே வரும்போது தலைமை ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில், மாணவரின் எதிர்காலம் கருதி அவர் மீது பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. அதேவேளையில் மாணவரின் பெற்றோரை அழைத்து அவரது செயல்பாட்டை எடுத்துரைத்து உள்ளனர். இந்நிலையில், தலைமை ஆசிரியரிடம் மாணவர் ஆவேசமாக பேசி மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

MUST READ