Homeசெய்திகள்இந்தியாமறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு!

மறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு!

-

- Advertisement -

 

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்..... உடல்நிலை இப்போது எப்படி இருக்கு?
மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷண், நாதஸ்வரம் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு பத்ம ஸ்ரீ என இந்தாண்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்தி

கலை, சமூகப்பணி, பொதுச்சேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில் மருத்துவம், இலக்கியம், கல்வி விளையாட்டு, சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைச்சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்சேவைப் பிரிவில் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கலைத்துறைப் பிரிவில் நடனக் கலைஞர் வைஜெயந்தி மாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன், நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைக்கு பீஹாரைச் சேர்ந்த மறைந்த பிந்தேஷ்வர் பத்தக்கிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி

கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, மறைந்த தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பொதுச்சேவைப் பிரிவில் தமிழக முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மறைந்த பாத்திமா பீவிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, வள்ளி கும்மியாட்ட கலைஞர் பத்ரப்பன், நாதஸ்வரக் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்தி

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

MUST READ