
இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
முத்தக்காட்சிக்கு கூடுதல் சம்பள விவகாரம்… ராஷ்மிகா மறுப்பு…
இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர். காசா எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது, காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்காக, பாலஸ்தீன அதிபருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
லியோ வெளியானது…. அடுத்த படத்தை தொடங்கினார் வெங்கட்பிரபு…
தொடர்ந்து, பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்கள் குறித்து குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.