மருத்துவ சிகிச்சைகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராமதேவ்க்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சந்தானம் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!
உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பதஞ்சலி நிறுவனம், தங்கள் தயாரிப்பு மருந்துகள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே மக்களைத் திசைத் திருப்பும் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது எனக் கூறியும், நிரந்தர நிவாரணம் என்ற அடிப்படையில் இதுபோன்ற விளம்பரத்தை ஒளிபரப்ப எங்கிருந்து தைரியம் வந்தது எனக் கேள்வி எழுப்பியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விவகாரம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியது.
காக்கி சட்டையுடன் காரில் வந்து இறங்கிய ரஜினி….. ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்!
இந்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராமதேவ் மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்ச்சார்யா ஆகியோர் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவுப் பிறப்பித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தத் தடை விதித்துள்ளது.