Homeசெய்திகள்இந்தியாபேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

-

 

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்த பேடிஎம் நிறுவனம், நாட்டில் மூலை முடுக்கில் உள்ள மக்களையும் சென்றடைந்தது. இந்த நிலையில் தான் KYC எனப்படும் வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, விதிகளை மீறியதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது.

“யாரையும் பழிவாங்க வேண்டாம்”- ஜெயக்குமாரின் மற்றொரு கடிதம் வெளியீடு!

இந்த நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம், இந்தாண்டு இறுதி வரை பாவேஷ் குப்தா, பேடிஎம் நிறுவனத்திற்கு ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ