பாஜகவை கர்நாடக மக்கள் புறக்கணித்துள்ளனர் – விசிக தலைவர்
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கார் திடலில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து அப்போது அவர் பேசியதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் விசிக தலைவர் திருமாவளவன். இவர் அதிகாரப்பரவல் என்ற அடிப்படையில் கட்சியின் நூறு நிர்வாக மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் 10% பெண்கள், 10% தலித் அல்லாதவர், 25% இளையோர் என வரையறுக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் எதிர்பார்த்ததைப் போலவே பாரதிய ஜனதா கட்சியை மக்கள் விரட்டியடித்து இருக்கிறார்கள் என திருமாவளவன் கூறினார். சிறுபான்மையினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் வாக்கு தேவையில்லை என்றும் பெரும்பான்மை இந்துக்களின் வாக்கு மட்டும் போதும் என்ற பாஜகவின் கணக்கு, தப்புக் கணக்காகி விட்டதாகவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மதம் சார்ந்த வாக்கு, வங்கி அரசியல் கணக்கு தப்பாகி உள்ளதென கூறிய திருமா, இந்து சமூக மக்களே பாரதிய ஜனதாவை புறக்கணித்துள்ளனர் என்றார். இனிமேலாவது மதம் சார்ந்த வெறுப்பு அரசியலை பாரதிய ஜனதா கட்சியை கைவிட வேண்டும் என தொல்.திருமா வலியுறுத்தினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை கவிழ்த்து, கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்வதே பா.ஜ.க.வின் வேடிக்கை என்று குற்றஞ்சாட்டிய திருமாவளவன், அதற்கு இடம் கொடுக்காமல் நாட்டை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் வி.சி.க.தலைவர்.
வி.சி.க.தலைவர் சனாதன சக்திகளிடமிருந்து ஒட்டுமொத்த தேசத்தையும் காப்பாற்ற, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருக்க, அவர் வேண்டுகோள் விடுத்தார்.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ப. ஜ.கட்சியை இந்து சமூகமே தூக்கி எறியப் போகிறது என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகள் சான்று என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.