- Advertisement -
ஹோலி பண்டிகையை வரவேற்கும் பொதுமக்கள்
வட மாநிலங்களில் ஹோலியை பண்டிகையை வரவேற்க மக்கள் தயாராகிவரும் நிலையில், கடைவீதிகளும் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.
சிறப்பு வழிபாடு, நடனம் என களைகட்டும் கொண்டாட்டம்
நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக வடமாநிலங்கள் தற்போதே விழாக்கோலம் காணத் தொடங்கியுள்ளன. பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள கோயில் ஒன்றில் ஹோலியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பெண் மற்றும் சிறுமி ஒருவர் கிருஷ்ணர் வேடமிட்டு நடனமாடினர்.
கடைவீதிகளில் வண்ணப்பொடிகள் விற்பனைக்கு குவிப்பு
ஐதராபாத்தில் உள்ள கடை வீதிகளில் ஹோலியை முன்னிட்டு, வண்ணப் பொடிகள், வாட்டர் கன் உள்ளிட்டவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் வியாபாரம் களைகட்டும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.