நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 13ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தத நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளதால் இந்த முழவை அரசு எடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மைய அரங்கத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பிறகு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அன்றுடன் முதற்கட்ட கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.
பிறகு ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு மார்ச் 13ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி வரை 17 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளியின் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ச்சியாக முடங்கி வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் முக்கிய அங்கமான “நிதி மசோதா” இன்று ஒருமனதாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.