Homeசெய்திகள்இந்தியாமகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!

மகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!

-

 

 

 

lpg cyclinder

உஜ்வாலா சமையல் எரிவாயு திட்ட பயனாளிகளுக்கு ரூ. 300 மானியத் தொகை தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் (PMUY) குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி 2024 – 2025 நிதியாண்டில் ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களுக்கும் மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கும் ரூ. 300 மானியத் தொகை தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மானியத்துடன் கூடிய எல்.பி.ஜி சிலிண்டர் ரூ. 603-க்கு கிடைக்கும்.

அதற்காக உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி வரையிலான நிலவரப்படி 2024ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்ட்டர் திட்டத்தில் பயனாளிகளாக சேர்ந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதியதாக மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்படி 2024 – 2025ம் ஆண்டு நிதியாண்டில் மானியம் பெற தகுதிவாய்ந்த நபர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அமைச்சரவை கூட்டம் முடிந்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சிலிண்டருக்கான மானிய தொகை வழங்கும் திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஊக்குவித்து செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 10,371 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

MUST READ