Homeசெய்திகள்இந்தியாவாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

-

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதேபோல் மூன்றாம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 07ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதேபோல் மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கினார். பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்யும் போது உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடதக்கது.

 

MUST READ