பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதிபரின் மனைவிக்கு சந்தன பேழையில் போச்சம்பள்ளி பட்டுத் துணியைப் பரிசளித்தார்.
“ரூபாய் 928 கோடியில் பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல்”- அமைச்சர் சக்கரபாணி அறிக்கை!
அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தகம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். பின்னர், பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு அதிபர் இந்திய பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்.
அதைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு, ஞானம், கலை, இசை, கல்வியைக் குறிக்கும் கடவுளான சரஸ்வதி மற்றும் பிள்ளையார் உருவங்களுடன் சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
மதுரையில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு!
தெலுங்கானா மாநிலத்தின் போச்சம்பள்ளி நகரில் தயாரான போச்சம்பள்ளி பட்டுத்துணியை அதிபரின் மனைவிக்கு பிரதமர் பரிசளித்தார். அதேபோல், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் பர்னேவுக்கு ராஜஸ்தானின் தயாரிக்கப்பட்ட கண்கவர் மார்பில் மேஜையைப் பரிசளித்தார்.