Homeசெய்திகள்இந்தியா’நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ - பிரதமர் மோடி பேச்சு..

’நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ – பிரதமர் மோடி பேச்சு..

-

PM Modi
நான் இஸ்லாமியர்களை பற்றி தவறா பேசக்கூடியவனா? அப்படி பேசினால் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து, மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த மாதம் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை உதாரணம் காட்டி “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னார். இந்துக்களின் சொத்து, பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இந்துக்களின் செல்வத்தை எடுத்து அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்போகிறார்கள். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார்.

PM Modi
Photo: PM Narendra Modi

மேலும் “உங்களுடைய நகை, பணத்தை கணக்கிட்டு, அதை எடுத்து முஸ்லீம்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்களா?” என்று பிரிவினைவாத கருத்துக்களையும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து வாரணாசியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் மோடி ,  பின்னர் தனியார்  தொலைக்காட்சி ஒன்றிற்கு  பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ராஜஸ்தானில் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிக குழந்தைகளைப் பற்றி பேசும்போது இஸ்லாமியர்களை மட்டுமே பேசினேன் என்று உங்களுக்கு யார் சொன்னது? அப்படி நான் பேசவில்லை. இஸ்லாமிய மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏழைக் குடும்பங்களிலும் இதுதான் நிலை. வறுமை இருக்கும் இடத்தில், அவர்களின் சமூக வட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிகமான குழந்தைகளை பெற்று கொள்கின்றனர்.

நான் இந்து என்றோ அல்லது இஸ்லாமியர்கள் என்றோ பிரித்து குறிப்பிடவில்லை. ஒருவர் எவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். நான் இந்து-முஸ்லிம் என்று பிரித்து பேசினால் அப்பொழுதே நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக இருப்பேன். இதுதான் என் தீர்மானம்” என்று கூறினார்.

MUST READ