Homeசெய்திகள்இந்தியா"இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?"- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!

“இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?”- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!

-

 

"இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?"- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!
Photo: Sansad TV

இந்தியர்கள் சோம்பேறி என நேரு கருதி இருந்தாரா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் மீதான விவாதம் மக்களவையில் இன்று (பிப்.05) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை ஏற்படும். ஒரு சிலரின் முக்கியத்துவம் குறையக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல; நாட்டின் சாதனையைப் பற்றி பேசுகிறோம்.

உலகின் 3ஆவது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்; இது மோடியின் கியாரண்டி. இந்தியர்கள் சுறுசுறுப்பு இல்லாதவர்கள் என நேரு கருதி இருந்தாரா? உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுவதை ஜி20 மாநாடு மூலம் உலகத் தலைவர்கள் புரிந்துக் கொண்டனர். வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். மத்திய பா.ஜ.க. அரசு பெரிய குறிக்கோள்களுடன் மிகவும் கடினமாக உழைக்கிறது.

ஆ.ராசாவை கண்டித்து வருகிற 09ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மந்தமாக ஊர்ந்துச் செல்லும் வேகத்திற்கு எந்தப் போட்டியும் இல்லை. 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. பா.ஜ.க. ஆட்சியில் கிராமப்புற ஏழைகளுக்கு 4.8 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 4.8 கோடி வீடுகள் கடும் பணியை முடிக்க காங்கிரஸ் கட்சிக்கு 100 ஆண்டுகள் பிடித்திருக்கும். தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை; ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி வியூகம் சிதறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

MUST READ