பப்புவா நியூ கினிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
ஜி7 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இருந்து தனி விமானம் மூலம் பப்புவா நியூ கினிக்கு சென்றடைந்தார். வழக்கமாக, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வந்தடையும் தலைவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிப்பதில்லை. இந்த நிலையில், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பப்புவா நியூ கினிக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த மரபில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது.
பப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, விமான நிலையத்திற்கு நேரில் வந்து பிரதமரை வரவேற்றார். அத்துடன், இந்திய பாரம்பரிய முறைப்படி, பிரதமரின் காலில் விழுந்து ஆசி பெறவும் முயன்றார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவரைத் தாங்கிப் பிடித்து, முதுகில் தட்டி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
தொடர்ந்து, பிரதமருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பப்புவா நியூ கினிக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பப்புவா நியூ கினியின் பயணத்தை முடித்துக் கொண்டதும், இறுதியாகப் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.