Homeசெய்திகள்இந்தியா"அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

-

 

"அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
Photo: SANSAD TV

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் மூன்று நாட்களாக விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். கடந்த 2019 தேர்தலிலேயே எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்கள் கொண்டு வந்துவிட்டனர்.

சதீஷ் நடிப்பில் உருவாகும் ‘வித்தைக்காரன்’….. படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும். எதிர்க்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவர் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். மத்திய அரசுக் கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மசோதாக்கள் நிறைவேறுவதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை; அதிகாரத்தின் மீதே ஆசை. எல்லா தருணத்திலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகத்தை தான் செய்திருக்கிறது. எவற்றில் எல்லாம் அரசியல் செய்யக் கூடாதோ, அவற்றில் எல்லாம் அரசியல் செய்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஜென்டில்மேன் 2’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி அவையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ