Homeசெய்திகள்இந்தியா"சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

-

- Advertisement -

 

"சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
Photo: ANI

மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள். சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதல். யார் எவ்வளவுத் தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துக் கொண்டே இருக்கும்.

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்

இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விவேகானந்தர், லோகமான்ய திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்

சனாதன விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் கருத்துத் தெரிவித்த நிலையில் பிரதமர் முதல்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

MUST READ