Homeசெய்திகள்இந்தியாஅமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி- பயணத்தின் முக்கிய அம்சங்கள்!

அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி- பயணத்தின் முக்கிய அம்சங்கள்!

-

- Advertisement -

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

குண்டர் சட்ட நடவடிக்கை- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, இன்று (ஜூன் 20) காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். வரும் ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இரு நாட்டு நல்லுறவு, வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, விண்வெளி, தொழில்துறைக் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கின்றனர்.

பின்னர், அமெரிக்கா காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். வரும் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

எகிப்து இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். எகிப்து நாட்டின் இரண்டாவது நாள் பயணத்தின் போது, புகழ்பெற்ற அல்- அஸர் மசூதிக்கு பிரதமர் செல்லவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MUST READ