
பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை காங்கிரஸ் தக்க வைப்பதை அவரால் தடுக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
“புதிய வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கார்டு தருவது நிறுத்தம்”- பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு!
பரத்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பணக்காரர்களைப் பெரும் பணக்காரர்களாக ஆக்குவதற்கும், ஏழைகளை மிக ஏழைகளாக மாற்றுவதற்கும் பா.ஜ.க. பணியாற்றி வருகிறது. நண்பர்களின் நலனுக்காகவே பா.ஜ.க. பணியாற்றி வருகிறது. சாமானிய மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பணியாற்றி வருகிறது.
பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ.வுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும், ராஜஸ்தானில் ஆட்சியை காங்கிரஸ் தக்கவைப்பதை அவரால தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 25- ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுளள்து. அதைத் தொடர்ந்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 03- ஆம் தேதி நடைபெறவுள்ளது.