கேலி சித்திரம்- நடிகர் பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார்
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலி சித்திரம் வெளியிட்டதாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக புகார் அளித்தனர்.
பின்பு செய்தியாளரை சந்தித்த தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், விண்வெளித் துறையில் இந்தியா வல்லரசாகக்கூடிய இந்த சூழ்நிலையில் சந்திராயன் மூன்று நிலவில் இறங்கக்கூடிய இந்த நேரத்தில் இந்திய விஞ்ஞானிகளையும் இந்திய மக்களையும் இந்திய தேசத்தையும் அவமானப்படுத்தும் விதமாக பிரகாஷ்ராஜ் அவர்கள் விண்கலம் படம் எடுத்து அனுப்பியவற்றை கிண்டல் செய்யும் விதமாகவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் தமிழர் நாடார் சமூகத்தைச் சேர்ந்த கைலாச வடிவு சிவன் அவர்களை கேவல படுத்தும் விதமாகவும் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார். இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பிரகாஷ் நடந்து கொண்டுள்ளார்.
இந்திய விஞ்ஞானிகளை அவமானப்படுத்துவதை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும். வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவைகளை தடை செய்ய வேண்டும். நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள போட்டோவை பாருங்கள், அதில் வெளியிட்டுள்ள புகைப்படம் சிவன் மாதிரி இருக்கிறதா? அல்லது பிரதமர் நரேந்திரமோடி மாதிரி இருக்கிறதா? என காண்பித்து கேள்வி எழுப்பினார்