
இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள் பறிமுதல்
அசர்பைஜானில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் பிடித்த இந்திய செஸ் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, நேற்று (ஆகஸ்ட் 30) விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு,க,ஸ்டாலினைச் சந்தித்த பிரக்ஞானந்தா, வெள்ளி பதக்கம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரக்ஞானந்தாவுக்கு ரூபாய் 30 லட்சத்துக்கான காசோலையை வழங்கியதுடன், வெள்ளி கேடயத்தையும் பரிசளித்தார்.
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
இந்த நிலையில், டெல்லியில் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று (ஆகஸ்ட் 31) இரவு 07.00 மணிக்கு பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், பெற்றோரிடம் கலந்துரையாடினார்.