Homeசெய்திகள்இந்தியாநிலவின் பள்ளத்தை உணர்ந்துப் பாதையை மாற்றிய 'பிரக்யான் ரோவர்'!

நிலவின் பள்ளத்தை உணர்ந்துப் பாதையை மாற்றிய ‘பிரக்யான் ரோவர்’!

-

 

நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!
Photo: ISRO

நிலவை ஆய்வுச் செய்து வரும் ‘பிரக்யான் ரோவர்’ நிலவின் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

41 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான்- 3 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 06.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரக்யான் ரோவர், நிலவின் தரைப் பரப்பில் தடம் பதித்து, தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) நிலவில் தனக்கு முன்னால் இருந்த 4 மீ விட்டம் கொண்ட பள்ளத்தை ரோவர் கண்டதாகவும், பூமியில் இருந்து அனுப்பப்பட்ட கட்டளைக்கு ஏற்ப, தனது பாதையை மாற்றியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!

தற்போது ரோவர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. ரோவரில் ஆறு சக்கரங்கள் இருக்கும் நிலையில், அதில் இரண்டு ஜோடி சக்கரங்களின் உயரத்தை அதிகரித்து, மேடான பகுதியைக் கடக்கக் கூடிய வகையில் தொழில்நுட்பம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ